இலங்கை உயிரியல் ஒலிம்பியாட் 2016ல் இலங்கை மாணவர்கள் போட்டியிட்டு பதக்கங்கள் வெற்றி பெறலாம். தெரிவு செய்யப்படும் நான்கு மணவர்களுக்கு 2017 இங்கிலாந்து, ஐக்கிய ராஜ்யத்தில் நடைபெறவுள்ள சர்வதேச உயிரியல் ஒலிம்பியாட் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பு கிடைக்கும்.
நுழைவுத் தகுதி:
2016ம் 2017ம் ஆண்டுகளில் தேசிய அல்லது லண்டன் உயர்தர பரீட்சைக்கு பங்கேற்கும் மாணவர்கள் இப்போட்டிக்கு விண்ணப்பிக்கலாம். தேசிய போட்டி எந்தவொரு வயது வரம்பும் இன்றி நடைபெறும், ஆனால் சர்வதேச போட்டியில் பங்கேற்க மாணவர்கள் 30 ஜுன் 2017க்கு வயது 20 கீழே இருப்பது அவசியம்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப கட்டணம் ரூ.800. இந்த கட்டணம் திரும்பப்பெற முடியாத கட்டணமாகும். இந்த கட்டணம் எந்த மக்கள் வங்கி கிளையிலும் “Institute of Biology கணக்கு இலக்கம் 086-1-001-4-1191763 மக்கள் வங்கி, திம்பிரிகஸ்யாய கிளை”க்கு செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை நிறைவு செய்து மக்கள் வங்கி வெளியிட்ட பற்றுச்சீட்டுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 31 மே 2016 அன்று அல்லது அதற்கு முன் கிடைக்குமாறு தபால் மூலம் அனுப்பி வைக்கவும்.
SLBO ஒருங்கிணைப்பாளர், உயிரியல் நிறுவனம்,
SLAAS அலுவலகம்,120/10,வித்யா மாவத, கொழும்பு 07
விண்ணப்பபடிவங்களை http://www.iobsl.org என்ற வலைத்தளம் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.
இலங்கை உயிரியல் ஒலிம்பியாட் போட்டி:
வெற்றியாளர்களை தேர்ந்தெடுக்கும் தேர்வு 26 ஜூன் 2016 ஞாயிறு மு.ப.10.00 தொடர் ந.ப.12.00 மனி வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள மையங்களில் நடைபெரும்.
• கொழும்புப் பல்கலைக்கழகம், கொழும்பு
• கிழக்குப் பல்கலைக்கழகம், மட்டக்களப்பு
• யாழ்பாணப் பல்கலைக்கழகம், யாழ்பாணம்
• பேராதணைப் பல்கலைக்கழகம், பேராதனை
• உருகுணை பல்கலைக்கழகம், மாத்தறை
• ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், நுகேகொட
வேட்பாளர்கள் 40 பல தேர்வு கேள்விகள் மற்றும் 20 குறுகிய பதில் கேள்விகள் கொண்ட 2 மணி நேர பரீட்சைக்கு உட்கார வேண்டும்.
இலங்கை உயிரியல் ஒலிம்பியாட் 2016
பரீட்சை பெரும்பாலும் க. பொ. த. உயர்தர உயிரியல் பாடத்திட்டத்தை அடிப்படையில் கொண்டுள்ளது. (பிரயோக உயிரியல் அத்தியாயம் தவிர). இத்துடன் தற்போதைய முன்னேற்றங்கள் மற்றும் உயிரியலின் பயன்பாடுகள் தொடர்பான வினாக்களும் அடங்கக்கூடும்.
வேட்பாளர்கள் பரீட்சைக்கு உட்கார சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம். சேர்க்கை அட்டைகள் 20 ஜூன் 2016க்கு முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
வெற்றியாளர்கள் தேர்வு:
தங்கம், வெள்ளி அல்லது வெண்கலப் பதக்கங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு அவற்றின் செயல்திறன் அடிப்படையில் வழங்கப்படும்.
வெற்றியாளர்கள் தேர்வில் IOB சபையினால் எடுக்கப்படும் முடிவு இறுதியானதாகும்.
50%ற்கு மேல் மதிப்பெண் பெற்ற அனைவருக்கும் IOB யினால் தகுதி சான்றிதழ்கள் வழங்கப்படும். அனைத்து முடிவுகளும் IOB வலைத்தளத்தில் வெளியிடப்படும்.
மேலும் விவரங்களுக்கு:SLBO ஒருங்கிணைக்கும் மையம்,
வனவியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் துறை, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம். பபசரா (077-1006937), அருன்ததீ (077-9646659).